ETV Bharat / state

கூலிப்படை உதவியுடன் காதல் கணவரை தீர்த்து கட்டிய மனைவி...3 பேர் கைது - வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் வைரவசாமி

சங்கரன்கோவிலில் கூலிப்படை உதவியுடன் கணவரை தீர்த்துக் கட்டிவிட்டு நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலிப்படை உதவியுடன் காதல் கணவரை தீர்த்து கட்டிய மனைவி...3 பேர் கைது

author img

By

Published : Aug 22, 2022, 8:53 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகேயுள்ள வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் வைரவசாமி (வயது30). இவரது மனைவி முத்துமாரி (23). கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே பைக்கில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

வாகனம் நடுவக்குறிச்சி காட்டுப்பகுதியில் சமத்துவபுரம் தாண்டி சென்ற போது திடீரென எதிரில் காரில் வந்த மர்ம நபர்கள் வைரவசாமி - முத்துமாரி தம்பதியினரை வழி மறித்து வைரவசாமியை கம்பு மற்றும் கற்களால் தாக்கினர் . இதில் அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தற்போது கொலை சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. உயிரிழந்த வைரவசாமியின் மனைவி முத்துமாரியின் முன்னாள் காதலலுடன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நகை திருடியது போல நடித்து கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்து , கட்டையால் தாக்கி கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர்.

இவ்வழக்கில் 20.08.2022 அன்று இரவு மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று கள்ளக்காதலன் இசக்கிமுத்து மற்றும் செல்போன் சிக்னல் உதவியோடு வடநத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் நடுவகுறிச்சி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து(29) அவரின் நண்பர்கள் காளிராஜ் (25)
அங்குராஜ் (25) ஆகிய மூவரையும் கைது செய்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வட மாநில இளைஞரை கத்தியால் குத்தி கொலை... போலீசார் தீவிர விசாரணை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.