தென்காசி: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் குறிஞ்சாங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் சுந்தரவேல் ராஜஸ்தானில் சைட் அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சுந்தரவேல் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அவரது தாயாருக்கு ரூபாய் ரூ.1,69,000 பணம் SBI YONO app-இல் அனுப்பியுள்ளார். அனுப்பிய பணம் தொழில்நுட்ப கோளாறால் அவரது தாயாருக்குச் சென்று அடையாத காரணத்தினால் சுந்தரவேல் Online ல் SBI வங்கியின் உதவி எண்ணைத் தேடிய நிலையில், (960******967) என்ற தவறான எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பணம் திருடிய Any Desk செயலி
இதனிடையே, SBI வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதுபோல் ஏமாற்றிய மோசடி நபர் சுந்தரவேலை (Any Desk App) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 999 பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து சுந்தரவேலின் மனைவி சுமதி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் (20.11.2021) புகார் அளித்தார். இதனையடுத்து அந்த வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட பணம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் முன்னிலையில் சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க: குடியரசு தின விழா: தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு