ETV Bharat / state

திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா - பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம்! - குற்றாலம் திருவாதிரை திருவிழா

தென்காசி திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளான இன்று, பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.

Tenkasi
Tenkasi
author img

By

Published : Jan 1, 2023, 7:27 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில், புகழ்பெற்ற திருவாதிரைத் திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வரும் 6ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஐந்தாவது நாளான இன்று(ஜன.1) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவபூதகண வாத்தியங்கள் முழங்க, முதலில் விநாயகர் தேரும், இரண்டாவதாக முருகன் எழுந்தருளிய தேரும், மூன்றாவதாக நடராசர் தேரும், நான்காவதாக குற்றாலநாதர் எழுந்தருளிய தேரும் இழுக்கப்பட்டது.

பின்னர் குழல்வாய்மொழி அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து, வரும் 4ஆம் தேதி சித்திரை சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: Video:புத்தாண்டு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.