தமிழ்நாட்டில், கரோனா ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தியை மக்கள் தங்கள் வீடுகளிலே கொண்டாடலாம் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து தலைமையில், பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் முன்பு, அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை வைத்து இந்து முன்னணி உறுப்பினர்கள் வழிபாடு நடத்தினர்.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்த காவல்துறையினர் அச்சிலை உள்பட மேலும் மூன்று விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மேலும் மாவட்டம் முழுவதும் எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடக்காதவண்ணம் ஏராளமான காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மண்டியிட்டு விநாயகரை வணங்கிய யானைகள்!