நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் தடையை மீறி பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு சென்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணைக்குப் பிறகு பொருட்களை வாங்க அனுமதித்தனர்.
மேலும், தென்காசி காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் ”பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் தேவையில்லாத காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களின் நலன் கருதி சில மளிகை கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்படும். அதில் ஒரு மீட்டர் தூரத்தில் வட்டம் போடப்பட்டு பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கிச் செல்லலாம்” என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் - ஆவின்