தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்றும், இன்றும் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காற்று வீசியது. மதியத்திற்கு மேல் திடீரென சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்துவருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலும் மழை பெய்வதால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கரோனா நோய் தாக்கத்தால் சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் குற்றால அருவி வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க:வெளுத்து வாங்கும் பருவமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளம்!