தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், இக்கோயிலின் மிக முக்கியமான ஆவணங்களை கோயில் ஊழியர் நீலகண்டன் தீயிட்டு எரித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்காரணமாக, ஆகஸ்ட் 27ஆம் தேதி கோயில் தாக்கர் பரஞ்சோதி, இவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோயில் ஆவணங்கள் எதற்காக தீயிட்டு எரிக்கப்பட்டது என்று பல்வேறு அமைப்புகளின் சார்பில் கேள்வி எழவே கோயில் நிர்வாக அலுவலர் கணேசன் கொடுத்தப் புகாரில் அடிப்படையில், நீலகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவைச் சேர்ந்த ஹவாலா கும்பல் சிக்கியது - அமலாக்கத்துறை விசாரணை!