கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து அறிக்கை வெளியிட்டது. அதனடிப்படையில், புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலத்திற்குச் வேலைக்குச் சென்ற முறை சாரா தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 35 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கையில் பணமும் இல்லை, மகாராஷ்டிரா அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். எங்களை சொந்த ஊருக்குத் திரும்ப தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்