தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை ஏராளமான மாணவர்கள் சென்ற நிலையில், இறுதியில் அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் தேவையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணி நியமனம் வழங்கப்பட்டது. அதற்குப் பின்னரும் 2020-21ஆம் ஆண்டுக்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், காவலர் எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால், கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், அரசின் நிதி நெருக்கடி குறைக்கும் வகையிலும், கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேவையான காலிப் பணியிடங்களில் நிரப்ப வலியுறுத்தி, தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மனு அளித்தனர்.
மேலும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் தற்போதைய காலகட்டத்தில் காவலர்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை பாதுகாப்பான வகையில் நடத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில், தங்களுக்கு பணி நியமனம் வழங்கக்கோரியும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:மதுக்கடையில் மது அருந்திய காவலர்: காணொலி வைரல்