தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரத்து 63 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 7 ஆயிரத்து 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6 ஆயிரத்து 879 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா சிகிச்சை கட்டுப்படுத்தும் விதமாக, ஆயக்குடி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் 150க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை ஆயிரத்து 303 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிப்பாளர்களுக்கு கபசுரக் குடிநீர், நெல்லிக்காய் சாறு, மூலிகை வேர் கொண்டு ஆவி பிடித்தல், யோகாசனம் போன்ற சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்து 190 பேர் குணமடைந்துள்ளனர். சித்த மருத்துவத்தின் மூலம் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து 6 முதல் 8 நாள்களுக்குள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி வருவதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியது உண்மையா?