தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-ஆவது பிறந்த நாள் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
நேற்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்த நிலையில் தமிழ்நாட்டில் அவரது உயிரிழப்பிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் நெல்கட்டுசெவல் பகுதியில் பூலித்தேவன் வாரிசுகளும், பொதுமக்களும் பேரணியாக வந்து அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
அதேபோன்று தென்காசி நகர்பகுதியில் அமைந்துள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் பூலித்தேவனின் திருவுருவப் படத்திற்கு திமுக-வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!