தமிழ்நாட்டில் பொதுமக்களுடன் காவல்துறையினர் நட்புடன் செல்ல பல்வேறு ரீதியான நடவடிக்கைகள்யும், செயல்பாடுகளையும் தமிழ்நாடு காவல்துறை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் பொறுப்பேற்ற சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஸ்தாஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தித் தீர்வு காணும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் பின்பற்றி வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்திலுள்ள 895 கிராமங்களுக்கு ஒரு காவலர்கள் நியமிக்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் குத்துக்கல்வலசை பகுதியில் சதாமுதின் என்பவர் இடப்பிரச்சனை தொடர்பாகத் தென்காசி நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், துணை காவல் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கே சென்று இருதரப்பினரிடம் விசாரித்துத் தீர்வை கண்டார்.
இதனால் பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் சென்று வரக்கூடிய அலைச்சல்கள் இன்றி பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். அத்துடன் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நிலமோசடி வழக்கு; திமுக பிரமுகர் உள்பட இருவர் கைது!