தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் கிராமம் புதுத்தெருவில் வசித்து வருபவர் அணைக்கரை செண்டு. இவருக்கு அப்பகுதியில் எட்டு ஏக்கரில் விவசாயம் நிலம் உள்ளது.
அதில் மூன்று ஏக்கர் பகுதியில் சிறுகிழங்கு பயிரிட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில், சிறுகிழங்கு பூக்கும் பருவத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், கள மருந்தை மணலில் கலந்து, நிலத்தில் வீசியதால் விளைந்த பயிர்கள் அனைத்தும் கருகி சேதமாகியது.
இது குறித்து, விவசாயி தனக்கு ஆறு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தரக்கோரி சேதமடைந்த பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
இதையும் படிங்க: வேளாண்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர் சந்திப்பு நேரலை...