தென்காசி: தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருந்தபோது சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஊரடங்கு காரணமாக உணவின்றி இருப்பதை அறிந்து, காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று, குளிப்பாட்டி, புத்தாடைகள் அணிவித்து, அவருக்கு உணவு வழங்கி அனுப்பிவைத்தனர்.
![மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசியைப்போக்கிய காவல் துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ten-32-humanitariankarivalamvandanallurnallurpolice-vis-scr-10063_12012022115743_1201f_1641968863_759.jpg)
காவல் துறையினரின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.