ETV Bharat / state

கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது

கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற நபரை காவல் துறையினர் கைதுசெய்து, 20 டன் அரிசியைப் பறிமுதல்செய்துள்ளனர்.

ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது
ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது
author img

By

Published : Feb 2, 2022, 10:34 AM IST

தென்காசி: புளியரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புளியரை சோதனைச்சாவடி வழியாகத் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், குட்கா புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள், அரிசி போன்ற கடத்தலைத் தடுக்கும்விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் விருதுநகரிலிருந்து கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக ரேசன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இது குறித்து ரேசன் அரிசியை கடத்திவந்த கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த அபு முகமது (44) என்ற நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட 20 டன் எடையுள்ள ரேசன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்செய்யப்பட்டு திருநெல்வேலி உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதையும் படிங்க: அரிசி கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - ஐ. பெரியசாமி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.