தென்காசி: சுந்தரேசபுரம் கிராமத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக, கால்நடைகள் பராமரிப்பு, விவசாயம் போன்றவற்றை மேற்கொள்வதில் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்.25)மனு அளித்தனர்.
சுந்தரேசபுரம் கிராமத்தில் சீரான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: குற்றாலம்: செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா