தென்காசி மாவட்டம் மகிழ்வண்ணநாதபுரம் அருகேவுள்ள கரிசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில், தனியார் (ஜியோ) செல்ஃபோன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனையறிந்த அப்பகுதி மக்கள், செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோபுரம் அமைக்கும் இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாவூர்சத்திரம் காவல் துறையினர், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.