தென்காசி மாவட்டம் இலஞ்சியில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் கோட்டை மாடன் எனும் முதியவர் அவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கழுத்தை நெரித்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தென்காசியில் உள்ள மஞ்சள் பள்ளியில் ஓய்வுபெற்ற வாட்ச்மேன் ஆவார்.
மேலும் கோட்டை மாடன் கொலை செய்யப்பட்டது குறித்து குற்றாலம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து கண்டறிய காவல் துறையினர் தற்போது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து துணை கண்காணிப்பாளர் மற்றும் குற்றாலம் காவல் ஆய்வாளர் தாமஸ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு