தென்காசி: கடையம் அருகேயுள்ள செல்ல பிள்ளையார் குளம் என்ற கிராமத்தின் பேருந்து நிலையம் அருகே பா.ஜனதா, அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் பா.ஜனதா கட்சியின் கொடியைக் கம்பத்திலிருந்து இறக்கி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளில் ஏதேனும் காட்சிகள் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ள நோட்டு மற்றும் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றிய இருவர் கைது