தென்காசி: மாவட்டம் சங்கரன்கோவிலில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்து அவர்களுடன் ஓடினார்.
சங்கரன்கோவில் இருந்து குருக்கள்பட்டி வரை 11 கி.மீ. மாரத்தான் போட்டியில் மரத்தான் வீரர்கள், மாணவ மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 3000 பேர் கலந்து கொண்டு ஓடினர்.
இதைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் முதல் 10 இடங்களைப் பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் 100க்கும் மேற்பட்ட மாரத்தான்களில் கலந்துக்கொண்டு ஒடியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: 135ஆவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்