விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 134ஆவது பிறந்த நாளான நேற்று(ஜூலை 17) தென்காசி - முத்துசாமி நகரசபை பூங்காவில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாவது,
'திமுக என்றாலே வன்முறை கலாசாரம் கொண்ட கட்சி என்பது நாடே அறிந்தது. அவர்கள் ஆட்சியில் இல்லாதபோதே தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கரோனா பரிசோதனைகள் அதிகமாக செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு கரோனா தடுப்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் உள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகிறார். தென் மாவட்டங்களில் ஓரிரு வாரங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசத் தடை!