ETV Bharat / state

பாஜக தடாலடியாக செயல்படுகிறது - எம்எல்ஏ முகம்மது அபுபக்கர்! - தமிழ்நாடு ஆளுநர்

தென்காசி: அரசியல் வாக்கு வங்கிக்காக நடத்தப்படும் வேல் யாத்திரை தமிழ்நாடு மக்கள் மத்தியில் எடுபடாது என கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகம்மது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ முகம்மது அபுபக்கர்
எம்எல்ஏ முகம்மது அபுபக்கர்
author img

By

Published : Nov 6, 2020, 2:41 PM IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடத்துவது சரியான நடைமுறை இல்லை. பாஜக மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுவது கிடையாது. தங்களது விருப்பத்திற்கிணங்க தடாலடியாக செயல்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் வலிமை பெறவும் வாக்கு வங்கிக்காகவும் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. ஆனால் அது தமிழ்நாடு மக்களிடையே செல்லுபடியாகாது.

எம்எல்ஏ முகம்மது அபுபக்கர்

மேலும் மத்தியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவிற்கு தலையாட்ட கூடியவராக தமிழ்நாடு ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் எழுவர் விடுதலையில் காலம் தாழ்த்துவது தமிழ்நாடு மக்களின் கோபத்திற்கு உள்ளாகக்கூடும். தமிழ்நாடு அரசியலில் திமுக , அதிமுக மட்டும்தான் கூட்டணிகளுக்கு தலைமை தாங்க முடியும். மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாவது அணி என்பது மறைமுகமாக யாருக்கோ ஆதரவு அளிப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவும் உள்ளது.

ஆனால் வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கடையநல்லூர் தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார்.

தையும் படிங்க: 'வெற்றி வேல் யாத்திரை': அனுமதி மறுத்த அரசு - பலத்தைக் காட்டும் முயற்சியில் பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.