ETV Bharat / state

சூரியகாந்தி பூவிற்கு கைமுறை மகரந்தச்சேர்க்கை - அறிமுகம் செய்த வேளாண்துறை! - Manual pollination of sunflower flower

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரையைச் சேர்ந்த விவசாயிகள் சூரியகாந்தி பூவிற்கு கைமுறையாக மகரந்தச்சேர்க்கை செய்து வருகின்றனர்.

சூரியகாந்தி பூவிற்கு கைமுறை மகரந்தச் சேர்க்கை

author img

By

Published : Jul 27, 2022, 10:30 PM IST

தென்காசி: உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் சீர்குலைந்துள்ளதால், தென் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையைப் பூர்த்தி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொள்ள தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரையைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்களில் கைமுறையாக மகரந்தச்சேர்க்கை செய்து வருகின்றனர்.

"சமீப ஆண்டுகளில் இயற்கையான மகரந்தச்சேர்க்கைக்கு போதுமான தேனீக்கள் இல்லை என்பதே இதற்குக் காரணம்" என்று செங்கோட்டை தொகுதியின் துணை வேளாண் அலுவலர் ஷேக் மொஹிதீன் விளக்குகிறார்.

பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் தேனீக்களின் எண்ணிக்கை குறைவதாக விஞ்ஞானிகள் கொடியசைத்து வருகின்றனர்.

தவிர, கைமுறை (கை) மகரந்தச்சேர்க்கை சிறந்த தரமான விதைகளை விளைவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். ’கடந்த எட்டு ஆண்டுகளாக நான்கு ஏக்கரில் சூரியகாந்தி பயிரிட்டுள்ளார். பெரும்பாலும், விளைச்சல் மோசமாக இருந்தது. நாங்கள் விவசாய அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் எங்களுக்கு கை மகரந்தச்சேர்க்கையை அறிமுகப்படுத்தினர்’ என்கிறார் விவசாயி கே.சிவண்ணன்.

'ஆனால், இந்தப் பணியானது உழைப்பு மிகுந்தது மற்றும் விவசாயிகளின் குடும்பங்கள் மட்டுமல்ல, தினசரி கூலித் தொழிலாளர்களின் உதவியும் தேவைப்படுகிறது. இதனால்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை, அலுவலர்கள் இதை ஊக்குவிக்க முயற்சி செய்கிறார்கள், பெரும்பாலான மக்கள் MGNREGAஇன்கீழ்,அதாவது நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தின்கீழ் பணியாற்ற விரும்புகிறார்கள்' என்று தெற்கு உலர்நில விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.நவநீதன் சுட்டிக்காட்டுகிறார்.

பண்ணைகளில் இருந்து தேனீக்கள் ஏன் மறைந்து வருகின்றன என்பது குறித்து, தேனீ விஞ்ஞானி கே. சுரேஷ் கூறுகையில், “பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதே முக்கியக் காரணம். இதனால் தான் தேனீக்களை அதிகம் பாதிக்காத இமிடாக்ளோபிரிட் போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இமிடாக்ளோபிரிட் கூட தேனீக்களைப் பாதிக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது” என்றார்.

பூச்சிக்கொல்லி மருந்தால் தமிழ்நாட்டு தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் ஒளி பொறிகள், பெரோமோன் பொறிகள், தாவரவியல் பூச்சிக்கொல்லி மற்றும் உயிர் கட்டுப்பாட்டு முகவர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் நட்பு பயிர் பாதுகாப்பைத் தேர்வுசெய்தால், தேனீக் காலனிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியகாந்தி பூவிற்கு கைமுறை மகரந்தச் சேர்க்கை

இதையும் படிங்க: நெல்லை மாநகரில் உலாவந்த காட்டெருமை; கருவேல புதருக்குள் தேடிய வனத்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.