தென்காசி: தட்டச்சு தலைநகர் என்று கல்வியாளர்களால் அழைக்கப்படும் சங்கரன்கோவில் பகுதியில் முதல் முறையாக பட்டப்படிப்புடன் கூடிய தட்டச்சுப்பயிற்சி வகுப்புகள் சங்கரன்கோவில்-நடுவக்குறிச்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வு சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, கல்லூரி முதல்வர் முனைவர் மு.அப்துல் காதிர், கல்லூரி பேராசிரியர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பெரியதுரை, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்