ETV Bharat / state

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவர் கைது! - மதுபாட்டில்கள் விற்றவர் கைது

தென்காசி: நெல்லையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மதுபாட்டில்களுடன் கைதான சுரேஷ்
மதுபாட்டில்களுடன் கைதான சுரேஷ்
author img

By

Published : Apr 17, 2020, 1:52 PM IST

Updated : Apr 17, 2020, 2:01 PM IST

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள் மூடப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே கால நிர்ணயத்துடன் இயங்கும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

மதுக்கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே மது விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்றுவருகிறது. எனவே, காவல் துறையினரும் கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக மதுவிற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பாளை ஆய்வாளர் சோமசுந்தரம், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில், மறைவிடத்தில் வைத்து மது விற்றுக்கொண்டிருந்த சுரேஷ் (39) என்பவர் கைதுசெய்யப்பட்டதோடு அவரிடமிருந்து 42 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ஊரடங்கு: விளைந்த சம்மங்கிப் பூவை அழிக்கும் அவலம்

Last Updated : Apr 17, 2020, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.