ETV Bharat / state

Coutrallam falls today update: நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

Coutrallam falls today update:தென்காசியில் நேற்று இரவு பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

Increase water flow in Courtallam
குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 1:17 PM IST

Coutrallam falls today update நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தென்காசி: தென் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கக் கூடியது குற்றாலம். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இது தென்னகத்தின் 'ஸ்பா' எனக் கருதப்படுகிறது. அதற்கு காரணம் எவ்வளவு உடல்வலி, மனவலியோடு குற்றாலத்திற்கு வந்தாலும் அவை அனைத்து காணாமல் போய்விடும்.

தற்போது மழைக்காலம் துவங்கியும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன சூழலில் குற்றால சீசன் களையிழந்து காணப்பட்டது. அதாவது சீசன் காலகட்டங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் பொதுவாக நீர் பெருக்கெடுத்து ஓடும். அதற்காக சில நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை எனவும் அறிவிப்புகள் கூட வெளியாகும். ஆனால் அந்த அளவுக்கு கொட்டும் அருவியில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக குற்றால அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு களையிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: எஸ்ஐ-யின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம் மதுரை கிளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.