கரோனா தீநுண்மி (வைரஸ்) பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அரசிடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை-வைத்துவருகின்றனர்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனிப் பகுதியில் நாதஸ்வரம், தவில், பம்பை இசைக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாதஸ்வரம், தவில் வாசித்து நிவாரணம் வழங்க அரசிடம் கோரிக்கைவைத்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வட்டாரங்களில் நாதஸ்வரம், தவில், பம்பை கலைஞர்கள் 500 பேர் உள்ளோம்.
கரோனா காரணமாக 50 நாள்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்வதால் சுப காரியங்கள் நடைபெறவில்லை. அதனால் வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்துவருகிறோம்.
எனவே அரசு எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்வகையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 3 லட்சம் புகைப்பட கலைஞர்களின் குடும்பங்களை அரசு காக்க வேண்டும்: விஜயகாந்த்