தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அத்திபட்டியைச் சேர்ந்தவர்கள் சின்ன முனியசாமி - கவிதா தம்பதியர். இதில் சின்ன முனியசாமி கோவில்பட்டியில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கவிதாவுக்கும் சின்ன முனியசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே கவிதா தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு (சாத்தூர்) செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி கவிதாவை ஹாலோபிளாக் கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த படுகாயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் சின்ன முனியசாமி குருவிகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் . இச்சம்பவம் குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் கணவரால் கொலை செய்யப்பட்ட கவிதாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:மனைவி பிரிந்த சென்ற சோகத்தில் கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்..