ETV Bharat / state

குற்றாலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்.. போலீஸ் வலையில் சிக்கிய சொகுசு விடுதி மேலாளர்! - பாலியல் தொழிலில் ஈடுபட்ட விடுதி மேலாளர் கைது

Courtallam prostitution: குற்றாலத்தில் புலி அருவி பகுதியில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சொகுசு விடுதி மேலாளர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை குற்றாலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட தனியார் விடுதி மேலாளர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 10:34 PM IST

தென்காசி: நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தென் தமிழகத்தின் பிரதான சுற்றுலா தளமாக விளங்கும் இடம் குற்றாலம். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் காலமாகக் கருதப்படுகிறது. அச்சமயத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்வதன் காரணமாகக் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகக் காணப்படும்.

குற்றாலம் பகுதியில் அதிக அளவில் இருக்கும் தங்கும் விடுதிகளில், பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தங்கி, குற்றால சீனனை ரசித்துச் செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது சில காலமாகக் குற்றாலத்தில் சீசன் சரியான நிலையில் தொடங்காமல், வறட்சியான நிலை காணப்படுகிறது.

இருப்பினும், அவ்வப்பொழுது பெய்யும் மழையால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் தண்ணீர் வரத்து சிறிதளவு இருக்கின்றது. இதனால் வழக்கமான சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாவிட்டாலும், அண்டை மாவட்டங்களிலிருந்து ஓரளவுக்கு பயணிகளின் வருகை உள்ளது.

இதையும் படிங்க: ஆட்டோவில் வந்து ஆவின் பாலை அபேஸ் செய்த கொள்ளையர்கள் - வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் நேற்று இரவு குற்றாலம் புலியருவி பகுதியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில், பாலியல் தொழில் நடைபெறுவதாகக் குற்றாலம் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த தனியார் சொகுசு விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, விடுதியின் மேனஜர் கேரளாவைச் சேர்ந்த மரியம் ஜார்ஜ் என்பவரையும், பாலியல் தொழில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் இன்னும் தொடரும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தோழியை ஏமாற்றி பல கோடி சுருட்டிய பலே பெண்கள்.. தாம்பரத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.