தென்காசி: சொக்கம்பட்டி அருகே வம்சவ விருத்தி நகர் பகுதியில் தலைமை காவலராகப் பணியாற்றிய சுந்தரையா என்பவர் மற்றொரு காவலர் மருதுபாண்டி என்பவருடன் நேற்று (அக்.12) தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், இரு சக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக, மதுரையை நோக்கி வந்த கார் ஒன்று, காவலர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் தலைமைக் காவலர் சுந்தரையா உயிரிழந்த நிலையில், காவலர் மருதுபாண்டி சிகிச்சைப்பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்க்கு வந்த சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருநங்கைகளை இளைஞர்கள் துன்புறுத்தும் காணொலி; குற்றவாளிகள் கைது