ETV Bharat / state

"நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக்கிடந்த அதிமுகவை பாஜக தான் ஒன்று சேர்த்தது" - எச்.ராஜா அதிரடி

சங்கரன்கேயிலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நெல்லிக்காய் மூட்டைகளாகச் சிதறி கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக என்றும், அந்த நன்றியை அதிமுக மறந்துவிட கூடாது என்று கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 10:51 PM IST

Updated : Sep 25, 2023, 11:11 PM IST

எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

தென்காசி: சங்கரன்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வருகை தந்திருந்தார். முன்னதாக தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "அதிமுக பாஜகவை நீக்கவில்லை, பாஜகவில் இருந்து தான் அதிமுக விலகி உள்ளது. அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி சண்டையை தீர்த்து வைத்தது பாஜக. பத்து நபர்கள் பட்டாசு வெடிப்பதற்கு இருந்தால், கூட்டணியை உண்டாக்கவும் செய்யலாம் அதில் இருந்து வெளியேவும் செல்லலாம்" என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் "இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாமல் 20% வாக்குகளை பெற்ற இயக்கம் பாரதிய ஜனதா கட்சி. பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக கூட்டணி முறிவு நஷ்டம் இல்லை, கூட்டணி முறித்தவர்களை கண்டு பச்சாதாபம் படலாம். கூட்டணி என்பது பொது எதிரியின் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக மட்டும் தான். அதை தவிர கொள்கை ரீதியாக சம்பந்தம் ஒன்னும் இல்லை" என கூறினார்.

பின்னர், தான் நான்கு நாட்களாக மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இனிமேல் அது இருக்காது எனவும் தெரிவித்ததை அடுத்து அரங்கில் சிரிப்பலை எழுந்தது. மேலும் பாஜக ஒட்டி வைக்காவிட்டால் அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை என்றும், ஈபிஎஸ் தற்போது பொறுப்பில் இருக்கிறார் என்றால் அதற்கு பாஜக தான் காரணம் என்ற நன்றியை மறந்தால், நன்றி மறந்தவர் ஈபிஎஸ் என்று கூறி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருப்பதாகவும், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், அதிமுக தற்போது எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் அதிமுக இன்றுடன் முடிந்தது எனப் பேசினார்.

மேலும், "நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தால் ஒரு தோண்டி, அதை ஈபிஎஸ் போட்டு உடைத்தாண்டி" என்று பாடலை பாடி விமர்சித்துப் பேசினார். மேலும் அதிமுக கூட்டணி முறிவு குறித்துக் கேட்ட கேள்விக்கு, எந்தவித பாதிப்பும் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என உறுதிப்படத் தெரிவித்தார்.

நாளைக்குள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கூட்டணி மேலும் வலுப்பெற்றது என்ற செய்தி வரும். நெல்லிக்காய் மூட்டைகளாகச் சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக தான். அதனை அதன் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது" என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.

தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக, காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வேலூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; வீட்டை பூட்டிக்கொண்டு மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last Updated : Sep 25, 2023, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.