தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சுடுகாட்டை மேம்படுத்துவதற்காக மின் மயானம் அமைப்பதற்கு நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் அமைப்பதற்கு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன.
தற்போது படுவேகமாக வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று(ஏப்ரல்.19) நகராட்சி குப்பை கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்ட சுழற்சி செய்யப்பட்ட குப்பைகளை மின் மயானம் அமைப்பதற்கான அடித்தளத்தில் கொட்டப்பட்டு நிரப்பி வருகின்றனர்.
இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்குச்சென்று குப்பைக் கழிவுகளை கொட்டும் நேரத்தில் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்த மக்களிடம் சமாதானம் பேசி, அவர்களை கலைந்து போகச்செய்தனர்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அரசு தரப்பில் கட்டப்படும் கட்டடங்களுக்கு அடிமட்டத்தில் (பேஸ்மட்டம்) குப்பைகளை நிரப்பியதைக் கண்டித்து போராட்டம் செய்ததால், சுடுகாட்டுப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: நர்ஸ் கடிக்கு நாய் கடி பரவாயில்லை.. நோயாளி அலைக்கழிப்பு