தென்காசி மாவட்டம் வடகரை வனப்பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டுயானை மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து உரிமையாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் தென்காசி வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகரை வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இங்கு மா, தென்னை, வாழை, நெல்லி உள்ளிட்டவை விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் அங்கு அவ்வப்போது காட்டுப்பன்றி, யானைகள் உணவு தேடி வருகிறது. அந்த வகையில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது. அதனால் விவசாயிகள் வனத்துறைக்க தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் இன்று (அக்.2) குறவன் பாறை வனப்பகுதிக்கு மாவட்ட உதவி வன அலுவலர் ஷாநவாஸ்கான், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் விளை நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, இன்று விளை நிலங்களுக்குள் புகுந்த யானையை வெடி வைத்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்