ETV Bharat / state

சத்தமில்லாமல் சாதித்துவரும் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர்!

author img

By

Published : Jul 1, 2022, 10:18 PM IST

'கோயில்களுக்கு செல்லும்போது 'அரவாணி' என்று ஏளனமாக பேசும் இளைஞர்கள் எனது திறமையைப் பார்த்த பிறகு என்னை பாராட்டுவார்கள்' என சத்தமில்லாமல் சாதித்துவரும் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர் தெரிவிக்கிறார். அவரைக்குறித்துவிவரிக்கிறது, இந்த செய்தித்தொகுப்பு...!

சத்தமில்லாமல் சாதித்துவரும் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர்

தென்காசி: கீழப்பாவூர் அடுத்த குருங்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். இவர் தனது 20ஆவது வயதில் திருநங்கையாக மாறியுள்ளார். எனவே, தனது பெயரை திருமலை ராணி நாச்சியார் என மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது இவருக்கு 31 வயது ஆகிறது. திருநங்கையாக மாறியதால் சமுதாயத்திலும் குடும்பத்திலும் பல்வேறு அவமானங்களை சந்தித்த திருமலை ராணி நாச்சியார் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

மேலும் சக திருநங்கைகள்போல் சாலைகளில் பேருந்துகளில் பொதுமக்களிடம் கை நீட்டி பணம் வசூலிப்பதை விரும்பாத இவர், சிறுவயது முதலே தனக்குத் தெரிந்த வில்லுப்பாட்டு கலையில் சாதிக்கத் துடித்துள்ளார். அதன்படி திருமலை ராணி நாச்சியார் தனது 12 வயது முதலே கோயில்களில் முளைப்பாரி பாட்டு, தெம்மாங்கு பாட்டுப் பாடுதல் போன்ற திறமைகளை வளர்த்து வந்துள்ளார்.

வில்லுப்பாட்டு அரங்கேற்றம்: பின்னர் 20 வயதில் திருநங்கையாக மாறிய கையோடு தென் தமிழ்நாட்டின் பிரபல வில்லுப்பாட்டு கலைஞரான பண்பொழி மாரியம்மாளிடம் முறைப்படி வில்லுப்பாட்டு கற்றுக்கொண்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளில் தற்போதுவரை திருமலை ராணி நாச்சியார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் வில்லுப்பாட்டு அரங்கேற்றம் செய்துள்ளார்.

தற்போதுள்ள இளைஞர்களுக்கு வில்லுப்பாட்டு என்பதை வெறும் பாட்டோடு இல்லாமல் காமெடியான பேச்சுடன் கூடிய தெம்மாங்கு பாடல், உடல் பாவனை ஆகியவற்றையும் விரும்புகிறார்கள். எனவே, அதற்கேற்ப திருமலை ராணி நாச்சியார் வில்லுப்பாட்டுடன் சேர்த்து தெம்மாங்கு பாடல் மற்றும் நகைச்சுவைப்பேச்சு என இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வில்லுப்பாட்டு படிப்பதில் சிறந்து விளங்கி வருகிறார்.

டாக்டர் பட்டம்: எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கோயில் நிர்வாகிகள் இவரை விரும்பி அழைக்கின்றனர். இவரது திறமையைப் பாராட்டி இதுவரை பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 6 விருதுகள் கிடைத்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் டெல்லியில் உள்ள நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் திருமலை ராணி நாச்சியாருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

மேலும் இதுவரை 23 கோயில்களில் கோல்டு மெடல் வாங்கி அசத்தியுள்ளார். தொடர்ந்து வில்லுப்பாட்டு கலையை அழியவிடாமல் பாதுகாப்பதும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நாட்டின் பிரதமர் கையால் விருதுகள் வாங்குவதும் தான் தனது ஒரே லட்சியம் என்கிறார், திருமலை ராணி நாச்சியார்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, 'திருநங்கையாக மாறியதால் குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பெற்றோர் ஆதரிக்கவில்லை. தற்போது தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். 12 வயதிலிருந்து முளைப்பாரிப் பாடல், தெம்மாங்கு பாடல் ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். பின்னர் 20 வயதில் முறைப்படி பண்பொழி மாரியம்மாளிடம் வில்லுப்பாட்டு கற்றுக்கொண்டேன். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் வில்லுப்பாட்டு பாடியுள்ளேன்.

சத்தமில்லாமல் சாதித்துவரும் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர்!

கலை வாழ்வை மாற்றியது: திருநங்கை என்றாலே இந்த சமூகம் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள். அந்த வகையில் கோயில்களில் வில்லுப்பாட்டு பாடும்போதும், பேருந்துகளில் பயணம் செய்யும்போதும், பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். கோயில்களுக்குச்செல்லும்போது இளைஞர்கள் முதலில் என்னைப் பார்த்து ’அரவாணி’ என்று ஏளனமாகப் பேசுவார்கள்.

ஆனால், வில்லுப்பாட்டில் எனது திறமையைப் பார்த்து விட்டு அதே இளைஞர்கள் விழா முடிந்தவுடன் என்னிடம் மன்னிப்பு கேட்பார்கள். இந்த கலையை அழிய விடக்கூடாது என்பதுதான் எனது நோக்கம். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கையிலும் பிரதமர் கையிலும் விருது வாங்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதுவரை நான் சாதித்துக் கொண்டிருப்பேன்’ என்றார்.

முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர்: திருநங்கைகள் என்றாலே வீதியில் பணத்துக்காக கையைத் தட்டிக்கொண்டு அனைவரிடமும் பணம் கேட்பதும்; சிலர் தவறான தொழிலில் ஈடுபடுவதும் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால், சமீப காலமாக பல திருநங்கைகள் தனித்துவமாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக அரசுத்துறைகளில் திருநங்கைகள் பணியில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் தமிழ்நாட்டின் முதல் வில்லுப்பாட்டு கலைஞர் திருமலை ராணி நாச்சியார், வில்லுப்பாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருவது அப்பகுதி மக்களுக்குப் பெருமை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமலை ராணி நாச்சியார் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் நாராயணன் கூறும்போது, 'தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வில்லுப்பாட்டு கலைஞர் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது. அவர் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். மேலும் அவர் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அன்புள்ள அண்ணன்' என்று ஆரம்பித்துவிட்டு ஓபிஎஸ்ஸை கடிதத்தில் வறுத்தெடுத்த ஈபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.