ETV Bharat / state

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி.. தென்காசி பள்ளி மாணவர்களுக்குத் தீயணைப்புத் துறை விழிப்புணர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 10:43 PM IST

Safe Diwali: தென்காசி அடுத்த கடையநல்லூரில் தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தரப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி: தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சார்பில் தென்காசி அடுத்த கடையநல்லூர் உள்ள தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகையின் போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்து கொள்வது குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு செய்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குறிப்பாக தீபாவளி அன்று பட்டாசுகளைக் கையில் வைத்து வெடிப்பதை தவிர்ப்பது, சிறுவர் சிறுமியர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலையில் வெடிக்கச் செய்ய வேண்டும் எனவும், வீட்டிற்குள் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது, மிகவும் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது என பட்டாசுள் வெடிக்கும் போது எப்படி கவனமாக இருப்பது என்பது அறிவுரைகள் கூறினர்.

மேலும் எரியும் மண்ணெண்ணெய் விளக்கில் பட்டாசுகளைக் கொளுத்த கூடாது என்றும், பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்காமல் இருந்தால் அதை மீண்டும் கையில் எடுக்கக்கூடாது எனவும் வழிகாட்டல் வழங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக காயம் ஏற்படும் சமயத்தில் நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களின் பள்ளி செல்லாத 8 ஆயிரம் குழந்தைகள்..! கல்வி கண் திறக்க அரசு மனது வைக்க கோரிக்கை!

பின்னர் கவனமாக பட்டாசுகள் வெடிப்பது, திடீரென தீ ஏற்படும் போது அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்தை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் செய்முறை விளக்கமாக பள்ளி குழந்தைகளுக்கு முன்பதாக செய்து காட்டினார். மேலும் அதை மாணவர்கள் நன்கு உணரக்கூடிய முறையில் அவர்களையும் செய்ய வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, பட்டாசுகள் வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்பட்டால், காயமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி, மற்றும் காயமடைந்தவர்களை ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கு ஏற்றபடி எப்படி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மாணவர்களை வைத்து செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வீடுகளில் எவ்வாறு கேஸ் சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், கேஸினால் ஏற்படும் விபத்துகளில் இருந்து எவ்வாறு தவிர்க்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளிக் குழந்தைகளிடம் தீயணைப்பு துறையினர் சொல்லிய விளக்கங்களை எவ்வாறு கற்றுக் கொண்டார்கள் என அவர்களிடம் கேட்டு, விபத்தில்லா தீபாவளி எப்படி கொண்டாட வேண்டும் என அவர்களையே சொல்ல செய்தனர்.

இதையும் படிங்க: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: புரட்சியை ஏற்படுத்துமா? புதிய எக்ஸ்-ரே டிடெக்டர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.