ETV Bharat / state

வெங்காய விலை வீழ்ச்சி: கண்ணீர் வடிக்கும் தென்காசி விவசாயிகள்! - Farmers worried by falling onion price

தென்காசி : அறுவடை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் தென்காசி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

வெங்காய விலை வீழ்ச்சி கண்ணீர் வடிக்கும் தென்காசி விவசாயிகள்!

author img

By

Published : Aug 11, 2020, 3:41 PM IST

தென்காசி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டமாகும். இங்கு அதிகளவில் நெல், வாழை, காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. அத்துடன், ஆண்டுதோறும் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், குரும்பலாபேரி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பெரிய வெங்காயம் சாகுபடி நடைபெற்றுவருகிறது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய் வரை விற்பனையானது. விலை உச்சத்தைத் தொட்ட போதும் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு எதிர்பார்ப்போடு விவசாயிகள் பெரிய வெங்காயத்தை சாகுபடி செய்தனர். தற்போது அதன் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெங்காய விலை வீழ்ச்சி கண்ணீர் வடிக்கும் தென்காசி விவசாயிகள்!
விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்யும் விவசாயிகள்

ஆனால், எதிர்ப்பாராத விதமாக கடந்த சில நாள்களாக பெரிய வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாள்தோறும் 300 டன் முதல் 400 டன் வரை பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. உள்ளூர் பகுதிகளில் விளைந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோ 7 முதல் 8 ரூபாய் வரை மிக குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "உள்ளூர் பகுதிகளில் தற்போது அறுவடை செய்யப்படும் பெரிய வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஆனால் அளவில் சற்று சிறியதாக இருக்கும். இதனால் பெரிய அளவில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் வெங்காயத்தையே பெரும்பாலான வியாபாரிகள் வாங்குகின்றனர். இதன் காரணமாக நாங்கள் சாகுபடி செய்த உள்ளூர் வெங்காயம் விற்பனைக்கு பெருமளவில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விலையும் எதிர்ப்பார்த்த அளவில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

வயலில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை வாகனத்தில் ஏற்றி சந்தைக்கு கொண்டுச் செல்ல ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் செலவாகும். மேலும் விதை, நடவு, பூச்சி மருந்து, ஆள் கூலி என கணக்கு பார்த்தாலும் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு குறையாமல் விற்பனை ஆனால் மட்டுமே லாபம் கிடைக்கும். தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெரிய வெங்காயம் விவசாயிகளை கண்ணீர் விட வைத்துள்ளது. கரோனா ஊரடங்கு, போக்குவரத்து தடை, ஏற்றுமதி கட்டுப்பாடு என தொடர்ந்த பிரச்னைகளை தாண்டி லட்சக்கணக்கில் செலவு செய்து வெயில் மழையில் உழைத்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என விரக்தியோடு கூறுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.