தென்காசி: கடையநல்லூர் அருகே உள்ள சேர்ந்தமரம் அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பாக கிராம சுகாதார பொதுநலம் மற்றும் சித்த மருத்துவ பிரிவின் சார்பாக நீரிழிவு நோய் தடுப்பு முறைக்கான பயிற்சி முகாம் செவிலியர்களுக்கு இன்று நடைபெற்றது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர்கள் கலந்து கொண்டனர் .மேலும் இந்த பயிற்சி முகாமில் நீரழிவு சம்பந்தமாக மருத்துவர்கள் செவிலியர்களுக்கு எடுத்து கூறி, நீரழிவு நோய் தடுப்பு முறையின் வழிமுறைகளையும் செவிலியர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.
இன்றைய தலைமுறையில் இந்த நீரழிவு நோய் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, இதைக்கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று இந்த நோயை தடுக்கலாம் என அவர்கள் கூறினர். மேலும் சிகிச்சைக்கு வரும் வரும் நோயாளிகளிடம் அன்பாகவும் அரவணைப்போடும் செவிலியர்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என அறிவுரையும் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பயிற்சியின்போது திறமையாக செயல்பட்ட செவிலியர்கள் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதாரநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அரசு மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி?