ETV Bharat / state

தென்காசியில் கரோனா அச்சுறுத்தலால் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை மறுப்பு! - தென்மேற்கு பருவமழை

தென்காசி : அரசு மருத்துமனைகளில் கரோனா தொற்றைக் காரணம் காட்டி பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Denial of treatment to other patients due to corona threat in Tenkasi

author img

By

Published : Aug 11, 2020, 8:31 PM IST

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் என ஐந்து நகராட்சிப் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இம்மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றை காரணம் காட்டி பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ”இந்த தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றத்தால் தென்காசி, கடையநல்லூர்,புளியங்குடி உள்ளிட்ட பல ஊர்களில் மக்களுக்கு அதிக அளவு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதயக் கோளாறு, சுவாசப் பிரச்னை, ரத்த அழுத்தம், சக்கரை வியாதி, சிறுநீரக டயாலிசிஸ் போன்ற நோய்களுக்கு மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனைகளை நாடினால் அரசு மருத்துவர்கள் கரோனா வைரஸைக் காரணம் காட்டி எந்த சிகிச்சையும் அளிக்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறாமல், வீடுகளிலேயே நோயுடன் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தென்காசியில் உள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பான்மையான நோயாளிகள், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் உடலளவில் பலவீனமடைந்திருக்கும் நோயாளிகள், மனதளவிலும் பாதிக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்து விடுகின்றனர்.

எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக அம்மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும்.

மேலும் இம்மருத்துமனைகளில் உடனடியாக கரோனா சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தி அந்தந்த பகுதி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கரோனா அல்லாத நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரதுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.