தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் தொகுதிகளுக்குள்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து அந்தத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குப்பெட்டிகள் கொடிக்குறிச்சி தனியார் கல்லூரியில் மாவட்டத் தேர்தல் அலுவலர், வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பாகச் சீல்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் இருக்கும் பகுதிகளில் திடீர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதாக ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா, கடையநல்லூர் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முகமது அபுபக்கர் ஆகியோர் புகார் தெரிவித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டி மாவட்டத் தேர்தல் அலுவலர் சமீரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அப்போது திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்லத்துரை, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் திடீரென மின்சாரம் துண்டிப்பு: பூங்கோதை ஆலடி அருணா புகார் - DMK
தென்காசி: வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதாக திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தென்காசி மாவட்டத் தேர்தல் அலுவலர் சமீரனிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.