ETV Bharat / state

குற்றாலநாத சாமி கோயில் தெப்பத் திருவிழா! - குற்றாலம் நீர்வீழ்ச்சி

தென்காசி: குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாத சாமி கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Courtrallanathar Temple Raftfestival
Courtrallanathar Temple Raftfestival
author img

By

Published : Jan 31, 2021, 8:02 AM IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் குழல்வாய்மொழியம்மை திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருக்குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்மை மற்றும் இலஞ்சி முருகப்பெருமான் தெப்பத்தில் பவனி வருகிற தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா நேற்று (ஜன.30) வெகு விமர்சையான நடைபெற்றது. காலையில் இலஞ்சி குமாரனை குற்றாலம் கோயிலுக்கு அழைத்து வந்து இளைப்பாற செய்து சாமி, அம்பாள், முருக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை முதல் திருவனந்தல், உதயமார்த்தாண்டம், விளாபூஜை, உச்சிகால பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.

குற்றாலநாத சாமி கோயில் தெப்பத் திருவிழா

மாலையில் சாமி, அம்பாள் தேரில் அமர்ந்து 11 முறை தெப்பத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனியாக சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளி வாகன புறப்பாடு வீதி உலா வந்தனர். விழாவில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், இலஞ்சி, மேலகரம், வல்லம், கொட்டாகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: வன பாதுகாவலனின் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.