தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் திருவிழாவின் 4ஆவது நாள் நிகழ்ச்சி குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், பொம்மலாட்டம், பழமையான தோல்களால் ஆன பாவைக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகை ஆண்ட்ரியா சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், நாட்டுப்புறக்கலைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அக்கலைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கரகத்தை தலையில் வைத்து உற்சாகப்படுத்தினார். இதன்தொடர்ச்சியாக நாட்டுப்புற கலைநிகழ்ச்சியான கரகாட்டம் நடைபெற்றது. கரகாட்ட கலைஞர்கள் உருண்டைக்கல்லில் பலகை வைத்து நடனம் ஆடி அங்கிருந்த மக்களை உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க: நானும் பருத்தி வீரனாக பயணத்தை தொடங்கியுள்ளேன் - அதிதி ஷங்கர்