கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக, நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, படிப்படியாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் ஒருபகுதியாக வாழ்வாதாரத்துக்காக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து குஜராத், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தொழில் செய்துவந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நாள்தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் திருநெல்வேலிக்கு வந்த வண்ணமே உள்ளனர். அவ்வாறு நேற்று திருநெல்வேலி திரும்பிய 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில், கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பட்சத்தில் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்!