தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே இருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு இதுவரை 10 ஆயிரத்து 850 நபர்கள் திரும்பியுள்ளனர்.
இதில் வீடுகளில் 10 ஆயிரத்து 122 நபர்களும், அரசு முகாம்களில் 728 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 வரை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று( ஜூலை14) ஒரே நாளில் 103 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 90 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக மாவட்டத்தில் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்துள்ளது. இதில் 480 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இத்தொற்றானது மக்களுக்கும் வேகமாக பரவிவருவதையடுத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: கிணற்றுக்குள் அடுத்தடுத்து உயிரிழப்பு - கிணற்றின் உரிமையாளர் கைது