தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, தன்னார்வலர்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்பேரில் ஆலங்குளம் காவல் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துணைக் கண்காணிப்பாளர் பொன்னி வளவன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் நடனக் கலைஞர்கள் குறு நாடகம், பாடல்கள், நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் அளிக்கப்பட்டன.
இதையும் படிங்க: மாஸ்க், ஹெல்மெட் போடலனா எமலோகம் தான்... காவல் துறையின் வித்தியாச விழிப்புணர்வு