தென்காசி: சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவராக திமுகவைச் சார்ந்த உமா மகேஸ்வரி சரவணன் இருந்து வரும் நிலையில், சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டில், அதிமுக 12 நகரமன்ற உறுப்பினர்களை பெற்றது. இருந்தபோதும் ஆளுங்கட்சி பலம் மற்றும் பண விநியோகம் என அனைத்து வழிகளை கையாண்டபோதும் சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக நகர மன்ற தலைவருக்கு 15 வாக்குகள் அதிமுக தொகுதி சார்ந்த நகர மன்ற தலைவிக்கு போட்டியிட்டவருக்கு 15 வாக்குகள் கிடைத்தன.
இறுதியில் நடைபெற்ற குழுக்கள் முறையிலான தேர்வில் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி சரவணன, நகர்மன்ற தலைவராக இருந்தாலும் நகர் மன்றத்தில் அவரது கணவர் சரவணன் அவர்களே நகர் மன்ற தலைவர் போல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், நகர மன்ற தலைவரின் கணவர் சரவணன் அனைத்து டெண்டர்களிலும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் டென்டருக்காகப் பெறும் கமிஷன் தொகையை பிரித்துக் கொள்வதில் திமுக நகர்மன்ற உறுப்பினர்களிடையே பாரபட்சம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கமிசன் தொகையை பிரிப்பதில் எழுந்த சர்ச்சை தொடர்பாக, 25 ஆவது வார்டு நகர் மன்ற பெண் உறுப்பினர் முப்புடாதி என்பவர் அவரின் கணவர் காவல்கிளியிடம் மது போதையில் பேசிய சரவணன் ஒரு மணிநேர ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் 25வது வார்டு நகர மன்ற உறுப்பினரின் கணவர் காவல்கிளி கந்துவட்டி தொழில் செய்து வருவதாகவும் அவர்மீது தான் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பேசியுள்ளார். மேலும், தனது மனைவியை நகர்மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பதற்காக பெற்றுக்கொண்ட ரூ.20 லட்சத்தைத் திரும்ப தருமாறும் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
மேலும் இந்த ஆடியோவில் தனது முறைகேடுகளுக்கு இடையூறாக இருந்த நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியாவை திருச்செந்தூருக்கு பணி மாற்றம் செய்ததாகவும் அதேபோல் உங்கள் மீதும் என்னால் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் மிரட்டியுள்ளார். மேலும், நகர மன்ற தலைவர் பதவிக்காக குதிரை பேரம் நடத்தி கொடுக்கப்பட்ட ரூ.20 லட்சத்தை காவல்கிளி என்பவர் உங்களிடம் வாங்கவில்லை எனவும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் தான் எனக்கு பணம் கொடுத்து உங்களுக்கு வாக்களிக்க சொன்னதாகவும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீங்கள் ரூ.20 லட்சத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பேசியுள்ளனர்.
இருவரும் இடையே நடந்த இந்த வாக்குவாதத்தில் இதுவரை திமுக மற்றும் சுயேச்சை நகர்மன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் நகர்மன்ற தலைவருக்கு வாக்களிக்கப் பெற்ற ரூ.20 லட்சம்; மேலும், மதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரின் கணவர் இசக்கியப்பனிடம் அப்பாயின்மென்ட் கமிட்டிக்காகப் பெற்ற ரூ.30 ஆயிரம்; மேலும் கான்ட்ராக்ட் கமிட்டிக்காக திமுக நகர மன்ற உறுப்பினர் மாரி சாமியிடம் பெற்றது ரூ.10,000 என்று நீண்டுகொண்டே செல்கிறது விவாதம், இதில் பல முறைகேடுகள் நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
இந்த அனைத்து தகவல்களையும் 25வது நகர்மன்ற உறுப்பினரின் கணவர் காவல்கிளி தானே ஒவ்வொரு வீடாகச் சென்று தனது வார்டு மக்களிடம் தெரிவிப்பதாகவும் கூறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பிறந்தநாள் விழா...திமுகவினர் மரியாதை