சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் காரணமாக உள்ளது. இதன் காரணமாக கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் விதிகளை மீறி பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அகற்றப்படாத வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலேயே பம்பர் கழற்றப்பட்டும் வருகிறது.
இதைத்தொடர்ந்து அரசியல் பிரமுகர்களும், அரசு அலுவலர்களும் தங்கள் கார்களில் உள்ள பம்பர்களை அகற்றி வருகின்றனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அரசு விதிமுறைக்கு உட்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் ஆட்சியர் வாகனத்தில் இருந்த பம்பர் அகற்றப்பட்டது. இதேபோன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்திலும் பம்பர் அகற்றப்பட்டது.
இதையும் படிங்க:வாகனங்களில் பம்பரை நீக்க இதுதான் காரணமா?