தென்காசி நகராட்சியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கரோனா தடுப்புப்பணியில் இந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், திடீரென காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் , 'தங்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூபாய் 600 வழங்குவதோடு, பணி நிரந்தரமும் செய்ய வேண்டும். தொடர்ந்து கரோனா தடுப்புப்பணிக்காக உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு அரசு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, தூய்மைப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்குவதாக அறிவித்து இருந்தது. ஆனால் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே இந்த இரட்டிப்பு சம்பளம் வழங்குவதாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: குற்றவாளியை கைது செய்யக் கோரி அறந்தாங்கி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்