ETV Bharat / state

குற்றாலத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி சாரல் திருவிழா தொடக்கம்

author img

By

Published : Jul 29, 2022, 2:24 PM IST

குற்றாலத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி சாரல் திருவிழா தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

குற்றாலத்தில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சாரல் திருவிழா தொடக்கம்

தென்காசி: குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலகட்டத்தில் சீசனை அனுபவிக்க வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு புத்தக திருவிழாவையும் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சாரல் திருவிழா 8 நாள்களும், புத்தகத் திருவிழா பத்து நாட்களும் நடைபெற உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு போட்டி, நீச்சல் போட்டி, கார் கண்காட்சி, நாய் கண்காட்சி, மலர் கண்காட்சி, அறிய வகை பழங்களின் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

புத்தகத் திருவிழாவில் 100 கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சாரல் திருவிழா மிகவும் சிறப்புடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்': ஓபிஎஸ்-க்கு பிரமதர் மோடி அட்வைஸ்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.