தென்காசி மாவட்டம் ஆயாள் பட்டியைச் சேர்ந்த பால் குட்டி, தனது இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவில் அருகேவுள்ள பனவடலிசத்திரம் பிரதான சாலையை நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது திருநெல்வேலியிலிருந்து, சங்கரன்கோயில் நோக்கிச் வந்த கார், எதிர்பாரத விதமாக பால் குட்டி மீது மோதியது. இதில் அவர் தூக்கியெறியப்பட்டார். தொடர்ந்து அந்த கார் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மற்ற வாகனங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பால் குட்டி, பெரியதுரை ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
அதேபோல் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 பைக்குகளும் இவ்விபத்தில் சேதமடைந்தன. பிறகு இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.