ETV Bharat / state

புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை - தென்காசியில் பரபரப்பு! - ஜேசிபி ஆப்பரேட்டர்

தென்காசி: சிவகிரி அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bride groom killed by unknown persons
bride groom killed by unknown persons
author img

By

Published : Mar 5, 2020, 5:08 PM IST

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஜேசிபி ஆப்பரேட்டர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நாளை 6ஆம், தேதி தென்மலையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு தேவையான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் நள்ளிரவுவரை ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அவரது அம்மா, சகோதரி, முனீஸ்வரன் ஆகிய மூவரும் ஒரே அறையில் தூங்க சென்றனர். அதன் பின்பு நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் முனீஸ்வரன் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.

புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை - தென்காசியில் பரபரப்பு

குடும்பப் பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வரதட்சணைக்காக மனைவியைக் கொலைசெய்த கணவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.